கற்பக விநாயகர் ஆலயம்

விநாயகர் அருள் பெற்று தமிழால் இணைவோம்.

தற்போது சுவிற்சலாந்தின் வோ(Vaud) மாநிலத்தில் Prilly எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான இந்து ஆலயமாகும். இவ்வாலயம் சுவிசில் இரண்டாவதாக தொடங்கப்பட்டது. வோ மாநில பக்தர்களின் விருப்பமான, மனங்களிலெல்லாம் நிறைந்து மக்களின் குறை தீர்த்து கற்பக விநாயகராக நீண்டகாலமாக எழுந்தருளியுள்ளார்.

இவ்வாலயம் 1993ம் ஆண்டிலிருந்து  இன்று வரை மிகவும் சிறப்பாக எம்மக்களின் துன்பங்கள் நீக்கி அருள் பாலித்துக் கொண்டு வருகின்றார். இந்துமத சித்தாந்தங்களாகிய அறம், பொருள், இன்பம் என்பவற்றை விளக்கும் பரிவார மூர்த்திகளையும் இவ்வாலயம் உள்ளடக்கியுள்ளது.

இவ் ஆலயத்தின் மூலவர் அருள்மிகு பிள்ளையாரும் பரிவார மூர்த்திகளாக துர்க்கை அம்மன், முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை அம்மனுடன், ஆஞ்சநேயர், நவக்கிரங்கள், பைரவர், சண்டேஸ்வரர். ஓவ்வொரு ஆண்டும் நடைபெறும் வருடாந்த மிகப் பெரும் திருவிழாவில் (12 நாட்கள் கொடியேற்றத்திலிருந்து பைரவர் மடை வரை) பல பக்தர்கள் உணர்வுபூர்வமாக பங்கேற்கின்றனர்.

கற்பக விநாயகர் ஆலயம்

எமது கட்டுமானப்பணி மிகவிரைவில் தொடங்க உங்கள் மனமார்ந்த பங்களிப்பு மிக மிக முக்கியம்.

வசதிகள்

புதிய ஆலயம் கட்டியபின் எங்கள் எதிர்கால திட்டம்

  1. இங்கு நாம் கட்டுவது ஆலயம் மட்டுமன்றி ஆலயத்தின் கீழே பரதநாட்டியம், சங்கீதம், யோகா போன்ற வகுப்புகள், கலைவிழாக்கள், திருமணம் போன்றவை நடாத்தக்கூடியதாக ஓர் கலாச்சாரமண்டபம் (முக்கியம்: மது, மாமிசமற்ற சைவ உணவுகள் மட்டுமே) அமைப்பது.
  2. முன்பகுதி (பிரதான வீதி அருகே) வணிகமண்டலம் (கடைகள் போன்றவை) அத்துடன் ஒருபகுதி மக்கள் கலந்துரையாட (வயதான ஓய்வுபெற்றோர் கேட்டதற்கிணங்க) ஒர் அறை.
  3. மேலும் நூலக வசதி, முதலுதவி மருத்துவ மன்றம், சக்கரநாற்காலி சேவை, காலணி வைக்குமிடம், வாகனத்தரிப்பிடம், போன்றவை.

சேவைகள்

  1. இந்துசமய தேவார வகுப்புகள்.
  2. அன்னதானங்கள், சிற்றுண்டிச்சேவைகள்.
  3. இளையோர்களுக்கான தமிழர் கலச்சார ஒன்றுகூடல் மற்றும் அவர்களின் சந்திப்பிடம்.
  4. அடுத்து Epalinges-Croisettes (Metro கடைசித் தரிப்பிடம்)இல் இருந்து ஓர் போக்குவரத்து சேவையும் ஒழுங்கு செய்கின்றோம். Bus வசதியும் உள்ளது.

புதிய ஆலயக் கட்டுமானம்

அன்பு நெஞ்சங்களே நீங்களும் எங்களுடன் இணைந்து நிதி திரட்ட முன் வாருங்கள்.

2018ம் ஆண்டு மீண்டும் சில நடைமுறைச் சிக்கல், மற்றும் பக்தர்களின் அதிகரிப்பால் வேறு இடத்திற்கு கட்டாயம் மாறவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் திரு. பாஸ்கரலிங்கம் தலைமையில் 21.01.2018 அன்று ஆலயத்தில் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சொந்தமாக கட்டிடமோ அல்லது நிலமோ வாங்கி நிரந்தர ஆலயத்தை அமைக்க வேண்டும் என்று வந்திருந்த பெரும்பான்மையான மக்கள் ஏகோபித்த முடிவை எடுத்தார்கள்.

மேலும் இதற்கான பொறுப்பாக 12பேர் கொண்ட பொது நலச்சிந்தனை மிக்க கட்டுமானப் பணிக்குழு உருவாக்கப்பட்டது. 03.02.2018 இலிருந்து இக் கட்டுமானப்பணிக்குழு தமிழ்க் கலாச்சார மன்றம் ((Cntre Culture Tamil (CCT)) என்ற பெயரில் புதிய ஆலயம் அமைப்பதற்கான முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுவிஸ் வாழ் எம்மக்களின் ஆன்மீக, கலாச்சார மற்றும் இன விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒர் சிறந்த ஆலயம் Lausanne தலைநகருக்கு அருகில் சுமார் நான்கு வருட நீண்ட தேடுதலுக்குப் பிறகு பல சிரமங்களுக்கு மத்தியில் Servion எனுமிடத்தில் எமது புதிய ஆலயம் கட்டுவதென கற்பக விநாயகர் அருளுடன் தீர்மானிக்கப்பட்டது.

நன்கொடை

எமது கட்டுமானப்பணி மிகவிரைவில் தொடங்க உங்கள் மனமார்ந்த பங்களிப்பு மிக மிக முக்கியம்.
எனவே கீழுள்ள விவரப்படி நீங்கள் தெரிவு செய்து பங்களிப்பை வாரி வழங்குங்கள்.

Contact Form Demo