கற்பக விநாயகர் ஆலயம்
வசதிகள் / சேவைகள்
வசதிகள்
புதிய ஆலயம் கட்டியபின் எங்கள் எதிர்கால திட்டம்
- இங்கு நாம் கட்டுவது ஆலயம் மட்டுமன்றி ஆலயத்தின் கீழே பரதநாட்டியம், சங்கீதம், யோகா போன்ற வகுப்புகள், கலைவிழாக்கள், திருமணம் போன்றவை நடாத்தக்கூடியதாக ஓர் கலாச்சாரமண்டபம் (முக்கியம்: மது, மாமிசமற்ற சைவ உணவுகள் மட்டுமே) அமைப்பது.
- முன்பகுதி (பிரதான வீதி அருகே) வணிகமண்டலம் (கடைகள் போன்றவை) அத்துடன் ஒருபகுதி மக்கள் கலந்துரையாட (வயதான ஓய்வுபெற்றோர் கேட்டதற்கிணங்க) ஒர் அறை.
- மேலும் நூலக வசதி, முதலுதவி மருத்துவ மன்றம், சக்கரநாற்காலி சேவை, காலணி வைக்குமிடம், வாகனத்தரிப்பிடம், போன்றவை.
சேவைகள்
- இந்துசமய தேவார வகுப்புகள்.
- அன்னதானங்கள், சிற்றுண்டிச்சேவைகள்.
- இளையோர்களுக்கான தமிழர் கலச்சார ஒன்றுகூடல் மற்றும் அவர்களின் சந்திப்பிடம்.
- அடுத்து Epalinges-Croisettes(Metro கடைசித் தரிப்பிடம்)இல் இருந்து ஓர் போக்குவரத்து சேவையும் ஒழுங்கு செய்கின்றோம். Bus வசதியும் உள்ளது.