கற்பக விநாயகர் ஆலயம்

புதிய ஆலயக் கட்டுமானம்

புதிய ஆலயக் கட்டுமானம்

அன்பு நெஞ்சங்களே நீங்களும் எங்களுடன் இணைந்து நிதி திரட்ட முன் வாருங்கள்.

2018ம் ஆண்டு மீண்டும் சில நடைமுறைச் சிக்கல், மற்றும் பக்தர்களின் அதிகரிப்பால் வேறு இடத்திற்கு கட்டாயம் மாறவேண்டிய சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் திரு. பாஸ்கரலிங்கம் தலைமையில் 21.01.2018 அன்று ஆலயத்தில் கூடியிருந்த மக்கள் முன்னிலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சொந்தமாக கட்டிடமோ அல்லது நிலமோ வாங்கி நிரந்தர ஆலயத்தை அமைக்க வேண்டும் என்று வந்திருந்த பெரும்பான்மையான மக்கள் ஏகோபித்த முடிவை எடுத்தார்கள்.

மேலும் இதற்கான பொறுப்பாக 12பேர் கொண்ட பொது நலச்சிந்தனை மிக்க கட்டுமானப் பணிக்குழு உருவாக்கப்பட்டது. 03.02.2018 இலிருந்து இக் கட்டுமானப்பணிக்குழு தமிழ்க் கலாச்சார மன்றம் ((Cntre Culture Tamil (CCT)) என்ற பெயரில் புதிய ஆலயம் அமைப்பதற்கான முயற்சியில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வருகிறார்கள்.

சுவிஸ் வாழ் எம்மக்களின் ஆன்மீக, கலாச்சார மற்றும் இன விழுமியங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒர் சிறந்த ஆலயம் Lausanne தலைநகருக்கு அருகில் சுமார் நான்கு வருட நீண்ட தேடுதலுக்குப் பிறகு பல சிரமங்களுக்கு மத்தியில் Servion எனுமிடத்தில் எமது புதிய ஆலயம் கட்டுவதென கற்பக விநாயகர் அருளுடன் தீர்மானிக்கப்பட்டது.

உடனே எம்மிடம் இருந்த பணத்தை முற்பணமாக 3 இலட்சத்து 20 ஆயிரம் சுவிஸ் பிராங்குகள்  Notaire (சான்று அலுவலகர்) உடன் கொடுத்து காணி உரிமையாளருடன் முன்பதிவு செய்துள்ளோம். இதுவரை 4 இலட்சம் சுவிஸ் பிராங்குகள் சேர்த்துள்ளோம்.

காணியின் மொத்த அளவு = 4194M2  

மொத்த விலை = 12 இலட்சம் சுவிஸ் பிராங்குகள். இதுவரை 3 இலட்சத்து 20 ஆயிரம் சுவிஸ் பிராங்குகளை இரண்டு தவணையாக    Notairரிடம் முற்பணமாக செலுத்தியுள்ளோம். இன்னும் 9 இலட்சம் சுவிஸ் பிராங்குகள் (காணிக்கு 8 இலட்சம் +  Notair காசு + Tax ) அவசரமாகத் தேவைப்படுகின்றது. வருகின்ற December 15ம் திகதிக்கு முன் தீர்க்கப்படவேண்டும்.

அன்பு நெஞ்சங்களே,

1M2  காணித்துண்டு = 1201 சுவிஸ் பிராங்குகள் செலுத்தி ஆலயக்கட்டிடத் தொகுதிக்கு நன்கொடையாக(தானமாக) வழங்கினால் நாங்கள் எல்லோரும் சேர்ந்து இவ் இலக்கை அடையலாம்.  இரண்டாவது; கலச்சார மன்ற அங்கத்தவர் தொகையாக மாதாந்த 30 சுவிஸ் பிராங்குகள் படி ஒழுங்காக எங்கள் கட்டுமானப்பணி வங்கிக்கணக்கிற்கு செலுத்தினால் ஓர் குறிப்பிட்ட மாதாதந்த வருமானம் வரும் போது சுலபமாக வங்கிக் கடன் பெறக்கூடியதாக இருக்கும்.

அத்துடன் குறைந்தது 1M2 காணித்துண்டை  1201 சுவிஸ் பிராங்குகளை நன்கொடையாகத் தருபவர்களின் பெயர் மற்றும் விபரங்களை (உங்கள் அனுமதியுடன்) செப்புத் தகட்டில் வரைந்து ஆலய முற்பகுதியில் நிரந்தரமாக பதிப்பதெனவும் தீர்மனித்துள்ளோம். அத்துடன் நீங்கள் அங்கத்தவர்களாகிய பின் எங்கள் WhatsApp குழுவில் இணைத்து எங்களது செயற்பாடுகளை உடனுக்குடன் நீங்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். இதில் நடப்பு விபரங்கள் மட்டுமே பகிரப்படும்.

மேலதிக விளக்கங்கள், சந்தேகங்கள் இருப்பின் தயங்காது தொடர்புப்பகுதியில் உள்ள தொலைபேசி இலக்கங்களுடன் இணைந்து  கொள்ளுங்கள். மேலும் வங்கி விபரங்கள், விண்ணப்பப்படிவம், QR Code மற்றும் எமது ஆலய கட்டிடத்தொகுதி வரைபடம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. உங்களால் முடிந்த உதவியை காலம் அறிந்து உதவியைச் செய்யுமாறு மிகவும் பணிவுடனும், நன்றியுடனும் வேண்டுகிறோம்.

உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் இவ்விடயங்களை எடுத்துக்கூறி அவர்களையும் பங்களிப்பு செய்ய ஊக்குவித்தால் நிச்சயமாக எமது இலக்கை அடைய முடியும். இதனடிப்படையில் மேலதிக உதவிகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

ஆலயம் கட்டுவதற்கான மதிப்பீடுகள், நிதி நிலைமை, கட்டிடம் சார்ந்த மேலதிகமான விளக்கங்கள் தேவைப்படின் எங்கள் கட்டுமானக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திரு. பாஸ்கரலிங்கம் தலைமையிலான ஆலய நிர்வாகக் குழுவும் திரு. குகநேசன் தலைமையிலான கட்டுமானக் குழுவும் ஒரே மாதிரியான நோக்கத்தில் புதிய ஆலயம் கட்டுவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்கள்.

அன்பு நெஞ்சங்களே நீங்களும் எங்களுடன் இணைந்து நிதி திரட்ட முன் வாருங்கள்.

நன்கொடை

எமது கட்டுமானப்பணி மிகவிரைவில் தொடங்க உங்கள் மனமார்ந்த பங்களிப்பு மிக மிக முக்கியம்.
எனவே கீழுள்ள விவரப்படி நீங்கள் தெரிவு செய்து பங்களிப்பை வாரி வழங்குங்கள்.

Contact Form Demo

Location for the Construction of the Tamil Cultural Center

EMPLACEMENT POUR LA CONSTRUCTION DU CENTRE CULTUREL TAMIL